தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்து ரயில்களிலும் முதியோருக்கு சலுகை வேண்டும்- சு.வெங்கடேசன் எம்பி - Madurai District News

அனைத்து ரயில்களிலும் முதியோர் சலுகை உள்ளிட்ட 53 சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பதாக ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைணவ்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.சு.வெங்கடேசன்

By

Published : Oct 22, 2021, 10:05 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா பிரச்சனையால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளன. ஏற்கனவே, வழங்கப்பட்ட 53 சலுகைகளை ரயில்வே பறித்துவிட்டது. குறிப்பாக முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என்று பல்வேறு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் சிறப்பு வண்டிகளில் நிறுத்தப்பட்டன.

தலைமை கணக்கு அலுவலர் அறிக்கை

21.5 கோடி பயணிகள் இப்பலனை அனுபவித்து வந்ததாகத் தலைமை கணக்கு அலுவலரின் அறிக்கை கூறுகிறது. இது மொத்த முன்பதிவில் பயணம் செய்பவர்கள் 11.5 விழுக்காடு ஆகும். இதில் 37.5 விழுக்காடு ரயில்வே ஊழியர்கள், அவர்களுக்கு வழங்குவது சட்டப்படியான சலுகையாகும். 52.5 விழுக்காடு பேர் முதியோர் சலுகை பெறுபவர்கள், நோயாளிகள் 3.8 விழுக்காடு பேர், மாற்றுத்திறனாளிகள் 3.6 விழுக்காடு . இதர சலுகைகள் 2.9 விழுக்காடு .

எல்லா இரயில்களிலும் முதியோர் உட்பட அனைத்து தரப்பினருக்கும்

குறிப்பாக, முன்பதிவு செய்து பயணம் செய்வோரால் வரும் வருமானத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை கழித்தால் மற்றவர்களுக்கு இந்த சலுகைகளால் ஐந்து விழுக்காடு வருமானம்தான் ரயில்வே துறைக்கு வராமல் போகிறது.

ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை

நமது நாட்டில் 20 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். மேலும், சரிபாதி மக்களின் வருமானமும் சொல்லத்தக்கதாக இல்லை. இந்நிலையில், பல சமூக காரணங்களுக்காகவும், சமூகக் கடமையாகவும் வழங்கப்பட்ட இந்த சலுகைகளை மீண்டும் திரும்பக் கொண்டுவர ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன்.

பயணங்களில் சலுகை

அக்கோரிக்கையில், டிசம்பர் 2020 முதல் முதியோர் சலுகை உள்ளிட்ட சலுகைகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயணம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பயணச் சலுகைகளை திரும்ப வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.

மத்திய இரயில்வே அமைச்சர்

அத்துடன் மாணவர்களுக்கான இலவச சீசன் டிக்கெட் உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். கிராம வியாபாரிகளுக்கு வசதியாக மார்க்கெட் வென்டார் சீசன் டிக்கெட்டுகளையும் திரும்ப வழங்கவும், இதற்கு வசதியாக சாதாரண பயணி வண்டிகளை மீண்டும் இயக்கவும், மீண்டும் விரைவு வண்டிகளில் பொதுப் பெட்டிகளை இணைக்கவும் வலியுறுத்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

முதியோர்களுக்கு சலுகை உள்ளிட்ட 53 சலுகைகளைத் திரும்ப வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கை குறித்து

இதனை அடுத்து முதியோர்களுக்கான பயணச்சலுகை உள்ளிட்ட பிரச்சனையில் ஆய்வு செய்து விரைவில் முடிவெடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அதே போன்று ரயில்வே துறையின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்ற பின் இரயில்வே ஆலோசனைக் குழுக்கூட்டம் கூட்டப்படாமல் இருக்கிறது என்பதையும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். கோரிக்கையை ஏற்று கூடிய விரைவில் ஆலோசனைக் குழுவை கூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்" என செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'திமுகவினர் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை' - பாபு முருகவேல்

ABOUT THE AUTHOR

...view details