மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் களத்தில் பரப்புரை சூடுபிடித்துள்ளது.
தயாநிதி மீது அதிமுக புகார் - தயாநிதி
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலை அவதூறாக பேசிவருவதாக திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
maran
இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலை தகாத முறையிலும், அவதூறாகவும் தான் சார்ந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிவரும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக நிர்வாகி பாலகங்கா தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளித்துள்ளார்.