சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சுதேசி பெண்கள் அமைப்பினர், கிறிஸ்தவ மத பேராயர் எஸ்றா சற்குணம் மீது புகார் அளித்தனர்.
எஸ்றா சற்குணம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் - சற்குணம் மீது புகார்
சென்னை: கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி அவர் மீது சுதேசி பெண்கள் அமைப்பு சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "எஸ்றா சற்குணம் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். தங்கள் மதத்தை புராணங்களில் புனைக்கப்பட்ட மதம் என்று கூறியதோடு, இந்துக்களை முகத்தில் குத்தி அவர்கள் மதத்தை பற்றி புரியவைக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.
சற்குணம் பேசியது இந்துக்களின் உணர்ச்சிகளை காயப்படுத்துகிறது. இந்தப் பேச்சால் மதக்கலவரம் வெடித்து சட்ட ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகலாம். எனவே எஸ்றா சற்குணம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றனர்.