சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் இன்று(மார்ச்.22) காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "தமிழ்நாடு காவல்துறை ரவுடிகளை ஒடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர்.
நடிகை நயன்தாராவை கைது செய்ய வேண்டும்... காவல் ஆணையரிடம் புகார்... - complaint against director vignesh shivan
ரவுடிகளை ஊக்கவிக்கும் விதமாக, பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் பொதுமக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும். அத்துடன் இருவரையும் கைது செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. அப்போது விக்னேஷ் சிவன், அவரது ரவுடி பிக்சர்ஸ் குழுவினர் இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மிதமிஞ்சிய போதை; தடம் மாறிய பாதை - தெலுங்கு நடிகை விபத்தில் பலி