இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் பேரிடரை எதிர்த்தும், மக்கள் நல்வாழ்வைப் பாதுகாக்கவும், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்றுக்கு பலியான நரம்பியல் நிபுணர் மருத்துவர் சைமன் ஹெர்குலீஸ் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் ஒரு கும்பல் தடுத்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
இந்தச் சூழலில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரையும் பாதுகாக்க தனிச் சட்டம் நிறைவேற்றக் கோரியும், நோய் தொற்றில் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி தெரிவித்தும் இன்று (22.04.2020) புதன்கிழமை இரவு 9 மணிக்கு அவரவர் வீடுகளில் மெழுகுவர்த்தி சுடர் ஏந்துவது என்று மருத்துவர்கள் அமைப்பு விடுத்துள்ள அழைப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முழு மனத்துடன் ஆதரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி சுடர் ஏந்தி பங்கேற்குமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மே மாத இலவச ரேஷன் பொருள்களுக்கு ஏப்.24, 25இல் வீடுகளுக்குச் சென்று டோக்கன் - அரசு அறிவிப்பு