தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான நல்லகண்ணுவின் புகைப்படத்தை, ஆபாசமாகச் சித்தரித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லகண்ணுவின் எளிமையான வாழ்க்கையை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.