சென்னை மாநகரில் நாள்தோறும் சுமார் ஐயாயிரம் டன் திடக்கழிவுகள், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றின் அளவை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்க, உரம் தயாரிக்கும் மையங்கள், உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள், கழிவுகளை உயர் வெப்பத்தில் சாம்பலாக்கும் உயர் இன்சினேட்டர் மையங்கள், தோட்டக்கழிவுகளில் இருந்து எரியூட்டும் உருளைகள் தயாரிக்கும் மையங்கள் என பல்வேறு வகைகளில் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.
மேலும், கொடுங்கையூர், அத்திப்பட்டு, சாத்தாங்காடு பகுதிகளில் உள்ள குப்பைகள் அள்ளப்பட்டு, பயோ மைனிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதோடு திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் மேம்பாட்டுப் பணிகள் ரூ.248 கோடி மதீப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.