தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிசிடிவி கேமராக்களால் காவல்துறைக்கு கூடுதல் பலம் - காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை: சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு மூலம் இடித்து விட்டுச் செல்லும் (hit and run) குற்றங்களில் 75% வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், மேலும் காவல்துறைக்கு கூடுதல் பலத்தை சிசிடிவிக்கள் உருவாக்கி இருப்பதாகவும் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

function
function

By

Published : Mar 13, 2020, 12:08 PM IST

Updated : Mar 13, 2020, 12:23 PM IST

அண்ணா நகர் பகுதி போக்குவரத்துக் காவல்துறை சார்பில் 12.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 66 சிசிடிவி கேமரா கண்காணிப்பு இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று துவக்கி வைத்தார்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், ”சென்னையில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட இடமாக அண்ணா நகர் இருக்கிறது. ஒரு காலத்தில் செயின் திருட்டு, வீடுகளில் திருட்டு உள்ளிட்டவை இப்பகுதியில் அதிகமாக இருந்த நிலை மாறி, அக்குற்றங்கள் குறைந்ததற்கு மிக முக்கியக் காரணம் சிசிடிவி கேமரா கண்காணிப்பு தான்.

அதேபோல் முன்பெல்லாம் இடித்து விட்டுச் செல்லும் (hit and run) குற்றங்களில் 100க்கு 25% தான் வழக்குகள் பதிவு செய்யமுடியும். ஆனால் தற்போது சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றம் புரிந்தோர் கண்டறியப்பட்டு 75% வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதை 100% ஆக அதிகரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் காவல்துறைக்கு கூடுதல் பலத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு, கடை உள்ளிட்டவற்றில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்“ என்றார்.

சிசிடிவி கேமராக்களால் காவல்துறைக்கு கூடுதல் பலம் - காவல் ஆணையர் விஸ்வநாதன்

இதையும் படிங்க: கள்ள ஆட்டம் ஆடிய சிவசேனா பிரமுகர் கைது!

Last Updated : Mar 13, 2020, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details