தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள்' - மயில்சாமி படுதோல்வி - Dmk lead in virugambakkam

சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Comedian Mylasamy, in Virugambakkam constituency, got 886 at the end of 7 rounds.
Comedian Mylasamy, in Virugambakkam constituency, got 886 at the end of 7 rounds.

By

Published : May 2, 2021, 4:32 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 11 ஆயிரத்து 50 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் வி.என். ரவி எட்டாயிரத்து 597 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் நண்பகல் நிலவரப்படி ஆயிரத்து 410 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஏழு சுற்றுகள் முடிவில் 886 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் தேர்தல் பரப்புரையின்போது மக்களைக் கவர பல்வேறு யுத்திகளைக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details