தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் குத்தி கொலை - கல்லூரி மாணவர்

சென்னை: காதல் விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் குத்தி கொலை

By

Published : Jun 26, 2019, 9:50 PM IST

சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜியில் இரண்டாம் வருடம் பயின்று வருபவர் செஷன் குமார்(20.) இவர் அதே கல்லூரியில் பயிலும் ஹரிஜனாசண்முகா என்பவரின் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதற்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கல்லூரி முடிந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தபோது ஹரிஜனாசண்முகா மறைத்து வைத்திருந்த கத்தியால் செஷன்குமாரின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ஷவன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் குத்தி கொலை

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிஜனாசண்முகாவை கைது செய்தனர். பின்னர் செஷன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details