தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல் - drugs ceased in airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய 3.250 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்

By

Published : Oct 3, 2022, 8:01 PM IST

சென்னை: விமானநிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய 3.250 கிலோ கொக்கைன் போதைப்பொருளை ஆடைக்குள்ளும், உடலுக்குள்ளும் மறைத்து வைத்து கொண்டு வந்த, உகாண்டா நாட்டுப்பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எத்தியோப்பியன் நாட்டுத்தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சர்வதேச போதைப்பொருளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் பெரும் அளவு போதைப்பொருட்களை கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள், பெண் சுங்க அலுவலர்கள் உட்பட்டோா், அந்த விமானத்தில் வந்த 217 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது உகாண்டா நாட்டைச்சோ்ந்த நம்பீரா நோலீன் என்ற பெண் பயணி மருத்துவ விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச்சென்று பெண் சுங்க அலுவலர்கள் முழுமையாகப் பரிசோதித்தனர்.

அப்போது அவருடைய உள்ளாடைகள், மற்றும் ஆடைக்குள் கொக்கையின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 3.250 கிலோ எடை கொண்ட அதனை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.35 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர், சுங்க அலுவலர்கள் அந்தப் பெண்ணை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் மதிப்பு முழுமையாகத் தெரியவரும். கடந்த சில மாதங்களாக இந்த குறிப்பிட்ட ஏா்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவது வாடிக்கையாகியுள்ளது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் புதிதாக சென்னைக்கு விமான சேவையை தொடங்கிய நிலையில், இந்த குறிப்பிட்ட விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details