தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடலோர விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்களை இடிக்க உத்தரவு!

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு அருகே கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு பங்களாக்களை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
Madras High Court

By

Published : Aug 16, 2020, 11:47 PM IST

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் கட்டப்பட்ட கட்டடங்களை சட்டவிரோத கட்டிடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு நோட்டீசை ஒட்டியது.

2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்த்து பங்களா உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள நான்கு பங்களாக்களை இடிக்க மாமல்லபுரம் உள்ளூர் திட்ட அலுவலர்க்கு உத்தரவிட்டது.

மேலும் சட்டவிரோத பங்களாக்களை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு காவல் துறை மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உதவி செய்யவும் அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் நோட்டீசை எதிர்த்து பங்களா உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details