சென்னை மாநகரத்தில் பல வழித்தடங்களில் மெட்ரோ தொடர் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மெட்ரோ தொடர்வண்டி சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகரை இணைக்கும் 9 கிலோ மீட்டர் தூர மெட்ரோ தொடர்வண்டியின் இரண்டாம் கட்டப்பணிகள், 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இந்தாண்டு மத்தியில் இந்தப் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது படிப்படியாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், கடந்த மாதம் முதல் மெட்ரோ தொடர்வண்டி விரிவாக்கப் பணிகள் மீண்டும் தொடங்கியது.