தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென் மண்டல கவுன்சில் கூட்டம்... இம்முறை ஸ்டாலின் பங்கேற்பார் - நதிநீர் பிரச்சனை

திருவனந்தபுரத்தில் வரும் செப்.3ஆம் தேதி நடைபெற உள்ள, 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 21, 2022, 9:19 AM IST

சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் ஆகியவற்றை உள்ளடக்கியது தென் மண்டல கவுன்சில். தற்போது 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

கடந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி திருப்பதியில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் செப். 3ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மற்ற மாநிலங்களுடன் பேசி, நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:முதியவர் மீது மினிப்பேருந்து மோதி விபத்து... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details