சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் விபத்தால் நடக்க முடியாத நிலையிலுள்ள கைப்பந்து வீராங்கனையும், 12 வகுப்பு மாணவியுமான சிந்து பொதுத் தேர்வை எழுதி வருகிறார். மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இடுப்புக்கு கீழ் செயல் இழந்து முடங்கிய நிலையிலும், உதவியாளர் துணையுடன் தேர்வு எழுதினார்.
மேலும், தனது லட்சியமான ராணுவத்தில் சேர முடியாவிட்டாலும், குடிமைப்பணியில் சேர்ந்து சாதிப்பேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.