சென்னை:இந்தியத் தேசத்தின் சட்ட வடிவமைப்பாளர் அண்ணல் அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று (டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்ந்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 65ஆம் ஆண்டு நினைவு: அதிகார குரலற்றவர்களின் அறிவாயுதம் அண்ணல் அம்பேத்கர்