சென்னை:தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று (டிச.10) கொளத்தூரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஜெயலட்சுமி, கீதா, மோகனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
சிவ இளங்கோ சாலையிலுள்ள வண்ணான்குட்டை பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.