தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை! - பெரியார் நினைவிடம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த முதலமைச்சர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

cm stalin homage at karunanidhi anna periyar memorial
cm stalin homage at karunanidhi anna periyar memorial

By

Published : May 7, 2021, 12:28 PM IST

சென்னை:முதலமைச்சராக பொறுப்பேற்ற முக. ஸ்டாலின்தலைவர்களின் சமாதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. அதன்படி, முதலில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார்.

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர்

அதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்ற பிற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து, தலைவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் புறப்பட்டார்.

கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

அதன்படி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர் அண்ணா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பெரியார் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details