சென்னை: இரவு ரோந்துப் பணியில் திருடர்களைப் பிடித்தபோது, தாக்குதலுக்குள்ளாகி வீரமரணம் அடைந்த திருச்சி நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பூமிநாதனின் மனைவி கவிதா, மகன் குகன் பிரசாத் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நிதி உதவியைப் பெற்றுக்கொண்டனர்.