சென்னை: ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும், தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவிவகித்த கோனிஜெட்டி ரோசய்யா (88) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிசம்பர் 4) காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், ரோசைய்யா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான ரோசய்யா மறைவு செய்தியைக் கேட்டபோது மிகவும் மன வேதனையடைந்தேன்.