ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.08) நடைபெற்றது.
ஏற்கனவே 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.