தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 14, 2021, 12:26 PM IST

ETV Bharat / city

கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்ற இன்பநிதி - வழி அனுப்பி வைத்த ஸ்டாலின்

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக வெளிநாடு சென்ற உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நெரோகா கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்ப உதயநிதியை தேர்வு செய்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியன் ஐ-லீக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ள இன்ப உதயநிதி சிறப்பாக விளையாடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையம் வந்த ஸ்டாலின்

இதற்காக சென்னையில் இருந்து வெளிநாட்டிற்குச் செல்வதற்காக இன்று (செப்.14) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் வழி அனுப்பி வைத்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதையும் படிங்க: ஐ - லீக் கால்பந்து அணிக்கு - உதயநிதி மகன் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details