சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, ஈரானிலிருந்து தமிழ்நாடு மீனவர்கள் 40 பேரை மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்! - முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
ஈரான் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழ்நாடு மீனவர்கள் 40 பேரை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மே 19ஆம் தேதி, நான் அனுப்பியிருந்த கடிதத்தை தயவுசெய்து நினைவுகூருங்கள். அதில், ஈரானில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்குமாறு நான் கோரியிருந்தேன். அதன்படி, 681 மீனவர்கள் 2020 ஜூலை ஒன்றாம் தேதி ஐ.என்.எஸ் ஜலாஷ்வா வழியாக தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். மேலும், கப்பலில் இடம் போதாததால் 40 மீனவர்கள் ஈரான் நாட்டிலேயே அகப்பட்டுள்ளனர். எனவே, விரைவாக ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை தாயகம் அழைத்து வர உதவிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.