தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதிய பேருந்து சேவை: எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

samy

By

Published : Feb 14, 2019, 2:36 PM IST

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் புதிய பேருந்து சேவைகள் இன்று தொடங்கப்பட்டன. இதனை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னையில் இருந்து 17 பேருந்துகளும், விழுப்புரத்தில் இருந்து 72 பேருந்துகளும், சேலத்தில் இருந்து 43 பேருந்துகளும், கோவையில் இருந்து 75 பேருந்துகளும், கும்பகோணத்திலிருந்து 68 பேருந்துகளும் என மொத்தம் 275 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகளுடன் அகலமான தாழ்தளப் படிக்கட்டுகள், தனித்தனி இருக்கைகள் அமைந்துள்ளன.

மேலும், அனைத்துப் பேருந்துகளிலும் நின்று பயணிக்க வசதியாக அகலமான பாதையும், பேருந்தின் இருபுறமும் அவசரகால வழிகள், இறங்கும் இடத்தை அறிவிக்க ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details