தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2021, 12:46 PM IST

ETV Bharat / city

75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு

நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட். 15) திறந்து வைத்தார்.

cm-mk-stalin
cm-mk-stalin

சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஆகஸ்ட். 15) தேசியக்கொடி ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து, பூலித்தேவர், வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரனார், சின்ன மருது, பெரிய மருது, பாரதியார், திருப்பூர் குமரன், ராஜாஜி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக காமராஜர் சாலையில் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை திறந்து வைத்தார்.

நினைவுத் தூணை பார்வையிடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இந்த நினைவுத் தூணின் கீழே ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்புறத்தில் அசோகச் சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன், அகலம் 10 அடி, உயரம் 55 அடியாகும். இந்த அசோகச் சக்கரம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்ப கலைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க:'நிதிச்சுமையிலும் மக்களை காக்கத் தயங்கவில்லை' - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details