சென்னை: தமிழகத்தில் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு 60 சதவீதம் நிதியை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
'தமிழகத்தில் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு 60 சதவீதம் நிதியை வழங்க வேண்டும்' பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - 60 சதவீதம்
16:29 December 03
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில்,' உயர் கல்வி பயில்வதற்கான உதவித் தொகை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். கல்வி ஆண்டில் 2020 - 2021ஆம் ஆண்டுகளுக்கு ரூ.2,110.90 கோடி தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசிடம் இருந்து ரூ.584 கோடி மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு இது நிதி சுமையை அதிகரிக்கிறது. எனவே தமிழகத்தில் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு 60 சதவீதம் நிதியை வழங்க வேண்டும் என, அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும் தெரித்துள்ளார்.