தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.3,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! - Drinking Water Drainage Board Project

சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மூன்றாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை
சென்னை

By

Published : Feb 5, 2021, 1:47 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 931 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 82 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில் 12 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் 100 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 9 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் ஆகியவற்றை தொடங்கிவைத்தார்.

மேலும், இரண்டாயிரத்து 472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரைக் கொண்டு, 108 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள், பழனி, தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சார்ந்த 253 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தைச் சார்ந்த 38 ஊரக குடியிருப்புகளுக்கு 11 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.

வேடசந்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த 84 ஊரக குடியிருப்புகளுக்கு 12 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் கூட்டுக் குடிநீர் திட்டம்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தைச் சார்ந்த 63 ஊரக குடியிருப்புகளுக்கு 17 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் கூட்டுக் குடிநீர் திட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டை ஒன்றியத்தைச் சார்ந்த ரெட்டியார்பட்டி, 63 ஊரக குடியிருப்புகளுக்கு 28 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.

ஈரோடு மாநகராட்சியில் 484 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தனிக் குடிநீர் திட்டம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 108 கோடியே
வாகன இணைப்பு சாலையில் 14 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சரக்கு முனையம்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில், 23 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி தெரு மின்விளக்குகள்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, தண்டையார்ப்பேட்டை, தொற்று நோய் மருத்துவ வளாகத்திற்குள் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடற்றோர்களுக்கான சிறப்பு காப்பகம்.

அம்பத்தூர், பாடியில் உள்ள டிஎம்பி நகரில் 7 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புர சமுதாய நல மையம்.

அடையாறு, பக்கிங்காம் கால்வாய் கரையில், கேன்சர் இன்ஸ்டியூட் பின்புறம் 1 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா,
என மொத்தம் 1,137 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய பிரிவு

1. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி இயக்குநரக புதிய திட்டப் பணிகள்:

சிவகங்கை மாவட்டத்தில் 1,752 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , 8 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களைச் சார்ந்த 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணசாலை பேரூராட்சிகள், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 778 ஊரகக் குடியிருப்புகளுக்கு 652 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 73 குடியிருப்புகளுக்கு 22 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த என்னேகொல்லு, 122 குடியிருப்புகளுக்கு 31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டம்.

பேரூராட்சி இயக்குநரகம் சார்பில், தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் பேரூராட்சியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாடுப் பணிகள், என மொத்தம் 2,472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி இயக்குநரக புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (பிப். 04) அடிக்கல் நாட்டினார்.

2. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம்

சென்னை மாநகரில் இணைக்கப்பட்ட திருவொற்றியூர், சூரப்பட்டு, புத்தகரம், கதிர்வேடு, மாதவரம், அம்பத்தூர், நொளம்பூர், மதுரவாயல், உள்ளகரம் புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 53 ஆயிரத்து 546 வீடுகளுக்கு கழிவுநீர் வீட்டிணைப்பு வழங்குவதற்கான இல்லந்தோறும் இணைப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாநகரில் உள்ள 200 பகுதிகளில் நிலத்தடி நீர் மட்ட அளவையும், நீரின் தரத்தையும் அறிந்துகொள்ள 6 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள எண்முறை தானியங்கி நிலத்தடி நீர்மட்ட அளவு மானி ( Digital water level recorder ) சென்னை மாநகர் முழுவதும் பரவலாக பெய்யும் மழைப் பொழிவின் அளவினை கணக்கிட 52 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மழை அளவுமானி கருவி ( Rain guage ) ஆகிய கருவிகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

3. பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு திட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பேருந்து சாலைகள், உட்புற சாலைகளில் உள்ள வாகன நிறுத்த பகுதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல், வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்துதல், வாகன நிறுத்த விதிகளை முறையாக செயல்படுத்தும் வகையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக அண்ணாநகர், தியாகராயநகர், பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் இன்று வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

இதன் மூலம் முறையான வாகன நிறுத்ததிற்கான வசதிகள் மேம்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும். The Economic Times நாளிதழ் நிர்வகிக்கும் “ET Government.com" என்ற அமைப்பு சென்னை மாநகரில் நீர் மேலாண்மைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, 'சிறப்பு நீர் மேலாண்மை மற்றும் சுகாதார விருது' பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புதுதில்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அன்று காணொலி மூலம் வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரூ.163 கோடி மதிப்பிலான பாசன மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details