சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை CM Dashboard என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த சிஎம் டேஷ்போர்டு திட்டம் மூலம், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் நடவடிக்கைகளை முதலமைச்சர் கண்காணிக்க முடியும்.
அத்துடன் ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் நிலை, வரபோகும் திட்டங்களின் முன்னோட்டம் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஓராண்டிற்கான திட்ட நடவடிக்கைகள் இதில் இடம்பெறும். இதற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 என்ற புதியத் துறை தொடங்கப்படஉள்ளது.