அதிமுக சார்பில் கீழ்ப்பாக்கம் அன்னை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கேக் வெட்டி, சிறுவர்கள் மற்றும் முதியோருடன் விருந்து சாப்பிட்டனர்.
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா - முதலமைச்சர் பங்கேற்பு! - கிறிஸ்துமஸ்
சென்னை: அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கேக் வெட்டினார்.
christmas
இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்ட முதலமைச்சர் அன்னை இல்லத்தைச் சேர்ந்த முதியோர் உள்ளிட்டோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் வந்தாச்சு... கடை வீதிகளில் பொருட்கள் விற்பனை மும்முரம்!