தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் துறையினர் கண் முன்னே வழக்கறிஞர்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி - காவல் நிலையத்தில் இருதரப்பினர் இடையே மோதல்

சென்னையிலுள்ள கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வழக்கறிஞர்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி
வழக்கறிஞர்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி

By

Published : Aug 17, 2021, 10:33 PM IST

Updated : Aug 18, 2021, 4:03 PM IST

சென்னை: கோட்டூர்புரம் 4 ஆவது சந்து நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் தனசீலன் (63). இவரது வீட்டருகே உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பத்மநாபன் (40) என்பவர் வசித்து வருகிறார். கோட்டூபுரம் நாயுடு தெரு 4ஆவது சந்து, அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுவான பாதையாக இருந்து வருகிறது.

சாலை அமைப்பது குறித்து தகராறு

இந்நிலையில், இந்த பாதையில் சிமெண்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன்வந்தபோது, சாலைகள் அமைத்தால் தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் எனக்கூறி பத்மநாபன், தாமஸ் சீனிவாசனுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி

இதற்கிடையே, நேற்று (ஆகஸ்ட் 16) பெய்த மழையில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், தாமஸ் சீனிவாசன் தனது குடியிருப்பு வாசிகள், சைதாப்பேட்டை வழக்கறிஞர்களான பாலமுருகன், மணிகண்டன், ஏஞ்சல் ஆகியோருடன் இணைந்து சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் பத்மநாபன், ரவி, பாலசந்தர் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் காவல் துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் இருதரப்பினர் மோதல்

கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குள் வந்த இரு தரப்பு வழக்கறிஞர்கள், அங்கும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர், இது குறித்து சைதாப்பேட்டை வழக்கறிஞர் பாலமுருகன், எதிர்தரப்பைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கிராம சபை கூட்டத்தில் பெண் தகராறு - தவறாக திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டதாக புகார்

Last Updated : Aug 18, 2021, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details