தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இனி குழந்தைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் கட்டாயம்! - சென்னை செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ்கள் இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இச்சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்
ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்

By

Published : Jan 4, 2022, 10:01 PM IST

சென்னை: ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் (ஜனவரி 5)அந்தமானுக்குச் செல்லும் அனைத்து உள்நாட்டுப் பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் கட்டாயம் என்று விமான போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கரோனா, ஒமைக்ரான் பரிசோதனை கட்டாயம். அத்தோடு மற்ற நகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமான பயணிகள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு 15 நாள்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரசின் பாதிப்பு, வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றின் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலிருந்து கரோனா, ஒமைக்ரான் அதிகளவில் பரவிவரும், கேரள மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கும், அகமதாபாத், கோவா, சீரடி ஆகிய பெருநகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமான பயணிகள் அனைவரும் பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ்களுடன்தான் பயணம் செய்ய வேண்டும். நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை.

விமான பயணத்திற்கு ஆர்டி-பிசிஆர் கட்டாயம்

சென்னையிலிருந்து மற்ற நகரங்களுக்குப் பயணிக்கும் உள்நாட்டுப் பயணிகள், கரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு தவணைகள் போட்டிருக்க வேண்டும். மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு 15 நாள்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் இருந்தால்தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது புதிதாகச் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் உள்நாட்டுப் பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் நாளையிலிருந்து கட்டாயம்.

இதனால் சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் ஐந்து விமானங்களில் பயணிக்கும் பயணிகளும் நாளையிலிருந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ்கள் இருந்தால்தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

2 வயது குழந்தைகளுக்குச் சோதனை கட்டாயம்

மேலும், இந்த உள்நாட்டு விமானங்களில் பெற்றோரோடு பயணிக்கும் குழந்தைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ்கள் கட்டாயம். இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாக சோதனை எடுக்க வேண்டும். சில விமான நிறுவனங்கள் ஒன்றரை வயது குழந்தைகளுக்கும் சோதனை சான்றிதழ்கள் கேட்பதாகக் கூறப்படுகிறது.

அது தவறு 24 மாதங்கள் நிறைவடைந்த இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என்று விமான நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் மொத்தம் 1158 தெருக்களில் கரோனா தொற்றாளர்கள் - மாநகராட்சி தகவல்

ABOUT THE AUTHOR

...view details