சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் இரு நாட்கள் சந்தித்துப் பேசினர். இன்று காலை இருநாட்டு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவளம் நட்சத்திர விடுதியில் தமிழ்நாட்டுக் கலைஞர்களின் கைவினைப்பொருட்களைப் பார்வையிட்டனர்.
மீட்டிங் ஓவர் - புறப்பட்டார் ஜி ஜின்பிங்! - PM Modi Xi Jinping Summit
இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு முடிவடைந்ததையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கோவளத்தில் இருந்து புறப்பட்டார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஒரு காஞ்சி பட்டுப்புடவையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பரிசாக வழங்கினார். பதிலுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சீன பீங்கான் தட்டை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார்.
கூட்டம் நிறைவடைந்ததையடுத்து கிளம்பிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கார் வரை சென்று பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். கோவளம் நட்சத்திர விடுதியிலிருந்து கிளம்பியுள்ள ஜி ஜின்பிங் சுமார் 2 மணியளவில் தமிழ்நாட்டில் இருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.