சென்னை:திருப்பூரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் குழந்தைகளுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுமார் 11 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக பாதுகாப்பு நலத்துறையின் இயக்குநர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருகிறது.