இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், விஐபி மற்றும் பிற அதிகாரிகளின் அரசு வாகனங்களில் தேவையற்ற பொருத்துதல்களை நீக்க வேண்டும். அதன்படி, அவர்களின் அரசு வாகனங்களில் முன்பகுதியில் உள்ள (crash bull bar) உள்ளிட்ட தேவையற்ற பொருத்துதல்களை, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக நீக்க வேண்டும் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் காரில் உள்ள பொருத்துதல்களை நீக்க உத்தரவு! - தலைமைச் செயலாளர் சண்முகம்
சென்னை: அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் அரசு வாகனங்களில் உள்ள தேவையற்ற பொருத்துதல்களை நீக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
secretary
தலைமைச் செயலாளர் சண்முகம் எழுதியுள்ள இந்த அறிவுறுத்தல் கடிதம், முதலமைச்சரின் அலுவலக செயலாளர், அனைத்து அமைச்சர்களின் செயலாளர்கள், தலைமைச் செயலக அரசு செயலாளர்கள், அனைத்து துறை செயலாளர்கள், அனைத்துத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியளர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தான் பணியாற்றிய காவலரிடமிருந்து பணத்தை திருடிய வாகன ஓட்டுநர் கைது