தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், திருப்பத்தூர் நகரில் 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தின் 36ஆவது புதிய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அண்மையில் உருவாக்கப்பட்டது. அதற்காக திருப்பத்தூர் நகரில் 27,376 சதுர மீட்டர் பரப்பளவில், 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.