சென்னை:அக்கடிதத்தில், ”முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அலுவலர்கள் மூலம் தகவல் கிடைத்தது.
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த அனுமதி தங்களுக்கு உதவும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுமதியை வழங்கியதற்காக கேரள அரசுக்கும், கேரள முதலமைச்சருக்கும், தமது அரசு சார்பிலும், தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவு உள்ளது:
இதன் மூலம் இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புவதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், அணையின் கீழ்ப்பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மேலும், வண்டிப் பெரியாறு, பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையை சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறும், தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகளை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்த சாலைப் பணிகள் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சருக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'நேர்கொண்ட பார்வை' சிறையில் இருந்து தப்பிக்கும் உலகநாயகன் - வெளியான 'விக்ரம்' க்ளிம்ப்ஸ்!