தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து - ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

By

Published : Sep 26, 2022, 1:09 PM IST

சென்னை: இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த நாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் திராவிட மாடலின் அங்கம்தானோ? - டிடிவி தினகரன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details