சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (26.7.2022) நாவலூரில் உள்ள ஒசோன் டெக்னோ பூங்காவில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
சிடிஎஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! - நாவலூரில் சிடிஎஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம்
நாவலூரில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Chief Minister
இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.