இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம், இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படும் இத்திருநாளில், அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.