தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் - திருவள்ளூர்

சென்னை: 385 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

inaguarates
inaguarates

By

Published : May 19, 2020, 2:14 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 8.68.22 ஹெக்டேர் நிலப்பரப்பில், 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையுடன், புதிய திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இம்மருத்துவக் கல்லூரியை நிறுவ, மத்திய அரசின் 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாயும், எஞ்சிய 190 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசும் வழங்கும்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 385 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. அதனடிப்படையில், நேற்று திருப்பூருக்கும், இன்று திருவள்ளூருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: முதுகலைப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ABOUT THE AUTHOR

...view details