தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலி மூலம் திறந்துவைத்தார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்களையும் அவர் திறந்துவைத்தார்.
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்கள், பாலங்கள் - முதலமைச்சர் திறந்துவைப்பு
சென்னை: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
open
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலர் சண்முகம், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நல்லாசிரியர் விருதுகள் வழங்கி முதலமைச்சர் சிறப்பிப்பு