இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், ‘தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவரது கைப்பட எழுதி அச்சடிக்கப்பட்டுள்ள இந்த வாழ்த்து மடல், தற்போது அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து! - பொங்கல் வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.
wishes