தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்! - tamilnadu remdesivir

தமிழ்நாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்
தமிழ்நாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்

By

Published : May 10, 2021, 12:39 PM IST

Updated : May 10, 2021, 3:26 PM IST

12:33 May 10

சென்னை: கரோனா அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி தருமாறு மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தை தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

நாளொன்றுக்கு தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 10, 2021, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details