தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரவல் சங்கிலியை உடைப்போம்: முதலமைச்சர் வலியுறுத்தல் - MK Stalin virtual meeting with district collectors

கரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைத்தெறிய அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கடுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடத்திய கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

Chief Minister MK Stalin
Chief Minister MK Stalin

By

Published : May 23, 2021, 7:17 AM IST

Updated : May 24, 2021, 11:47 AM IST

சென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மே.24) காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அதில், “கரோனா தொற்று சங்கிலியை உடைப்பதற்கும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு தேவை. ஊரடங்கு காலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற வேண்டும்.

தான் என்ற எண்ணம் இல்லாமல் நாம் என்று அனைத்து மாவட்ட அலுவலர்களும் கட்டாயம் உழைக்கவேண்டும். காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பால் விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும். தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை அலுவர்கள் அனைவரும் உறுதிபடுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தங்களது முழு ஒத்துழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு!

Last Updated : May 24, 2021, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details