தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்ட்ரல் சதுக்கம் பணிகள் - முதலமைச்சர் நேரில் ஆய்வு

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமையவுள்ள சென்ட்ரல் சதுக்கம் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் நேரில் ஆய்வு
முதலமைச்சர் நேரில் ஆய்வு

By

Published : Oct 8, 2021, 6:10 PM IST

சென்னை: 'சென்ட்ரல் சதுக்கம்' என்ற 31 மாடி கொண்ட பன்னோக்கு கட்டட கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் கட்டுமானப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

சென்ட்ரல் மெட்ரோ நிலையம் – விக்டோரியா ஹால் இடையே உள்ள இடத்தில், மெட்ரோ நிறுவனம் சார்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 31 மாடிகளுடன் சென்ட்ரல் சதுக்கம் கட்டப்பட்டு வருகிறது.

பயணியர் விடுதிகள், ஷாப்பிங் மால், பொழுதுபோக்குப் பூங்கா, ஹோட்டல்கள் மற்றும் தரைக்கு அடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம் என சகல வசதிகளுடன் இந்த சதுக்கம் கட்டப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் நேரில் ஆய்வு

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த திமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில், தற்போது பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கிறது.

பன்னோக்கு கட்டடம்

குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய சந்திப்பு என்பது ரயில் நிலையங்கள், ரயில் தடங்கல் சேரும் இடமாக இருக்கிறது. எனவே, அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு பன்னோக்கு கட்டடம் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின்கீழ் 31 மாடிகளுடன் சென்ட்ரல் பிளாசா கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்ட்ரல் பிளாசா கட்டடத்தின்கீழ் தளத்தில் 500 கார், 1,000 பைக் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அமைகிறது. கட்டடத்தின் மாதிரி வரைபடம் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அப்பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல், கத்திப்பாரா மேம்பாலத்தின்கீழ் கட்டப்படும் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இது 1.45 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கட்டப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை

ABOUT THE AUTHOR

...view details