தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 35,000 லிட்டர் அளவு கொண்ட அதிநவீன பிராணவாயு கலனை காணொலி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.