தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டுக்கு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

டெல்லி: தேர்தல் பணிகளுக்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ்நாடு வர இருக்கிறார்.

சுனில் அரோரா

By

Published : Mar 31, 2019, 9:16 AM IST


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரப்புரை, பொதுக்கூட்டம் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பும் தீவிரமடைந்து இருக்கிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு தேர்தல் அதிகாரிகளுடன் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ்நாடு வர இருக்கிறார். அன்றைய தினம் மாலை அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி காலை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கும் அவர், அதன்பிறகு தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடமும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details