தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கர்ப்பத்தை தொப்பை என நாடகமாடிய சிறுமி - எட்டு மாதத்தில் வெளிவந்த உண்மை... இளைஞர் கைது! - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

சென்னையில் எட்டு மாத கர்ப்பத்தை தொப்பை என நாடகமாடி சிறுமி ஏமாற்றி வந்த நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்பத்தை தொப்பை என நாடகமாடிய சிறுமி
கர்ப்பத்தை தொப்பை என நாடகமாடிய சிறுமி

By

Published : Oct 3, 2022, 5:23 PM IST

சென்னை: நகரில் 17 வயது சிறுமியின் வீட்டருகே உள்ள கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதில் 17 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பம் குறித்து சிறுமி அந்த இளைஞரிடம் கூறியபோது, நாம் விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும், அதுவரை இதை யாரிடமும் கூற வேண்டாம் எனவும் இளைஞர் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து நாளடைவில் கர்ப்பம் வளர வளர சிறுமி குடும்பத்தாரை சமாளிக்க தனக்கு தொப்பை போட்டுவிட்டதாக அனைவரிடமும் கூறி நாடகமாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி சிறுமிக்கு ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக தனது தாயுடன் சின்ன போரூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாதம் கர்ப்பமாக உள்ளதை தாயிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அவரிடம் விசாரித்தபோது, தனது காதலன் குறித்து சிறுமி, தாயிடம் கூறியுள்ளார்.

பின்னர் சிறுமியின் தாயார் அந்த இளைஞரை தொலைபேசியில் அழைத்து, தனது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, திருமணம் செய்துகொள்ள முடியாது என இளைஞர் மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 30ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை மூலம் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் மருத்துவமனைக்குச்சென்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாயார் அளித்தப்புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கி குழந்தையை கொடுத்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த, அந்த இளைஞரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:இலங்கை அகதி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விஏஓ கைது...

ABOUT THE AUTHOR

...view details