தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலை விதிகளை மீறிய உணவு டெலிவரி ஊழியர்கள் - ஒரேநாளில் 978 வழக்குகள்! - உணவு டெலிவரி ஊழியர்கள் மீது 978 வழக்குகள்

சென்னையில் ஒரேநாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, உணவு டெலிவரி ஊழியர்கள் மீது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்விக்கி ஊழியர்கள் மீது 450 வழக்குகளும்,சொமேட்டோ ஊழியர்கள் மீது 278 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

swiggy
swiggy

By

Published : Apr 1, 2022, 7:47 AM IST

சென்னை பெருநகர காவல் மற்றும் கூடுதல் காவல் ஆணையாளர்(போக்குரத்து) அறிவுறுத்தல்களின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் உணவு டெலிவரி ஊழியர்களை கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், சென்னை முழுவதும் நேற்று சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு தணிக்கையின்போது, 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஸ்விக்கி, சொமோட்டா, டன்சோ போன்ற நிறுவனங்களின் வாகன ஓட்டிகள் அதிகளவில் விதி மீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகவும், அதன்படி ஸ்விக்கி ஊழியர்கள் மீது 450 வழக்குகளும்,சொமேட்டோ ஊழியர்கள் மீது 278 வழக்குகளும், டன்சோ ஊழியர்கள் மீது 188 வழக்குகளும், பிற நிறுவனங்கள் மீது 62 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னலை மீறியதாக 581 வழக்குகளும், ஸ்டாப் லைனை தாண்டியதாக 131 வழக்குகளும், ஹெல்மெட் அணியாததற்கு 115 வழக்குகளும், ஒருவழிபாதையில் சென்றதாக 70 வழக்குகளும், செல்போன் பயன்படுத்தியதாக 20 வழக்குகளும், அதிவேகமாக சென்றதாக 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான மயில் சிலை - விசாரிக்க உண்மை கண்டறியும் குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details