தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2021, 6:27 PM IST

ETV Bharat / city

இரண்டே நாள்தான்.. 28,000 பேருக்கு செக்

போக்குவரத்து விதிகளை மீறியதாக இரண்டு நாட்களில் ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் சிக்கிய 10 ஆயிரத்து 905 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: அண்ணாநகர் ரவுண்டானா, முகப்பேர் உள்ளிட்ட முக்கிய 5 சிக்னல்களில் 57 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் (அதி நவீன சிசிடிவி கேமரா) பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் சாலை விதியை மீறும் வாகனங்களின் பதிவு எண்கள் உடனடியாக படம் பிடிக்கப்பட்டு தேசிய தகவல் தொழில் நுட்பத்தின் சர்வருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்பு சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு 10 நொடிகளில் அபராதம் கட்டுவதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பாக வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்கினாலும், ஸ்டாப் லைனை தாண்டினாலும், சிவப்பு சிக்னலை மீறினாலும், எதிர்திசையில் வாகனத்தை இயக்கினாலும் உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறையை ஜூலை ஒன்றாம் தேதி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அண்ணா நகரில் தொடக்கி வைத்தார்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று (ஜூலை 2) இரவு 10 மணி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 10 ஆயிரத்து 905 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜூலை 1ஆம் தேதி சிக்னல் விதிகளை மீறியதாக 4 ஆயிரத்து 513 பேருக்கும், ஸ்டாப்லைன் தாண்டியதாக 386 பேருக்கும், எதிர்திசையில் வண்டியை இயக்கியதாக 48 பேருக்கும் என மொத்தம் 4 ஆயரத்து 951 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும்,

ஜூலை 2ஆம் தேதி எதிர்திசையில் வாகனத்தை இயக்கியதாக 42 பேருக்கும், ஸ்டாப் லைன் மீறியதாக 387 பேருக்கும், சிவப்பு சிக்னலை மீறியதாக 5 ஆயிரத்து 538 பேருக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 964 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாள்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 28 ஆயிர்தது 226 வாகனங்கள் ஏ.என்.பி.ஆர் கேமராவில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பழுதடைந்த நம்பர் பிளேட், வாகனம் வேறு உரிமையாளர் பெயரில் ஓடுவது என அனைத்தையும் கழித்து 10 ஆயிரத்து 905 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே.. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..

ABOUT THE AUTHOR

...view details